Saturday, February 27, 2010



Nifty ட்ரேடிங் பக்கங்கள

* சரியான நேரத்தில் முதலீடு .
* பொறுமை .
* சரியான நேரத்தில் லாபத்துடன் வெளியேறுதல் .
* முதலீடிற்க்குப்பின் குழப்பமில்லாமல் இருப்பது .





Friday, February 26, 2010

பட்ஜெட் டே !!!!!!!!

இன்று முதல் நம் கவலைகளை எல்லாம் துரத்தி விட்டு புது உலகத்தில் புதிய பாதையில் சரியான பயிற்சியின் மூலம் வெற்றி நடை போட எல்லோருக்கும் நம் இனிய நல்வாழ்த்துக்கள் .

இது ஒரு புதிய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது.

Thursday, February 25, 2010

வெற்றிகரமான எல்லா மனிதர்களுக்கும் பொதுவாகவுள்ள அடிப்படையான அத்தியாவசியமான குணம் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே .....

ஏனோ தானோ என்றோ அல்லது எப்போதோ மட்டும் தோன்றும் நம்பிக்கையை வைத்து உங்கள் குறிக்கோளை அடையவே முடியாது .

Wednesday, February 24, 2010

பொறுமை மிக மிக அவசியம் !

மீன் பிடிக்க செல்கிறவர்கள் , பெரிய மீனாய் வேண்டுமென்றால் , இரையை முள் கொக்கியில் கோர்த்துவிட்டு கரையில் பொறுமையாகத்தான் காத்திருக்க வேண்டும் .

எழுதும்பொழுதும் , திரும்ப திரும்பப் படிக்கும்பொழுதும் உங்கள் எண்ணங்கள் தெளிவடைகின்றன. அப்பொழுது உங்கள் லட்சியத்தை அடையும் வழிகள் உங்களுக்கு தெளிவாகத் தெரிகின்றன.

நீங்கள் விழிப்புணர்வுடன் ஆர்வத்தோடு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் இலட்சியத்தை நெருங்க முடியும் .

எந்தத் தடையையும் , எதிர்மறை உணர்ச்சிகளையும் உங்களை நெருங்க விடாதீர்கள் .

சிந்தனைகளை சிதற விடாதீர்கள் .

நாம் நன்றாக இருக்கும் வரை நம் மனம் சரியான திசையில் சரியான சந்தர்ப்பத்தில் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்கும்.

Tuesday, February 23, 2010

நீங்கள் செய்யப்போவதென்ன ?

ஒரு வெற்றியாளராக வேண்டும் என்றால் எந்தத் துறையானாலும் ,அத்துறையில் வெற்றி பெற்றவர்களின் பாதையை தொடருங்கள் .

அவர்களின் ஆலோசனையை பெறுவதற்கு எல்லா வகையிலும் முயன்று வெற்றிக்கனியை சுவைத்திடுங்கள் .

வெற்றியாளர்கள் சொல்வதை சந்தேகப்படாதீர்கள்.

வெற்றியாளர்களை சந்தேகப்பட்டு , அவர்களை தொடராது போனால் நஷ்டப்படப்போவது யார் ? முடிவு செய்து கொள்ளுங்கள் .

உங்கள் குறிக்கோள் என்ன ?
உங்களுக்கு வரும் செல்வம் ஒருமுறை வந்தால் போதுமா அல்லது தொடர் வருமானமாக இருக்க வேண்டுமா ?
லாட்டரியில் வரும் செல்வம் போலவா அல்லது நீருற்று போல எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும் செல்வமா ?
செல்வம் குவிப்பதில் தீர்மானமாக இருங்கள் .
நீங்கள் சரியான முறையில் செயலாற்றினால் பணமும் சம்பாதிக்கலாம் . நிம்மதியாகவும் உறங்கலாம் .

"தன் திறமைகளை பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவன் அறிவாளி "

" எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் விழிப்பாக இருந்தால் போக வேண்டிய இடத்தை நிச்சயமாக அடையலாம்."